சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி மின் தடை அறிவிப்பு: மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்

சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக அக்டோபர் 6-ம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, அக்டோபர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் முன்னதாகவே நிறைவடையும் பட்சத்தில், மின் விநியோகம் உரிய நேரத்திற்கு முன்னதாகவே மீண்டும் வழங்கப்படும்.
திருவேற்காடு பகுதியில் சிவன் கோவில் சாலை, ஈஸ்வரன் நகர், செல்வவிநாயகர் நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், அன்பு நகர், அனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர் மற்றும் மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை இருக்கும். அதேபோல, மேடவாக்கம் பகுதியில் வெள்ளக்கல் மெயின் ரோடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, பெல் நகர் 1 முதல் 5-வது தெரு வரை, வடக்குப்பட்டு மெயின் ரோடு, ரவி மெயின் ரோடு, ஜே.கே அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சைதாப்பேட்டை பகுதியில் டிராட் ஹண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல தெருக்களில் மின் விநியோகம் இருக்காது. தாம்பரம் பகுதியில் மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் என இரு பகுதிகளிலும் மின் தடை ஏற்படும். இதில் மேற்கு தாம்பரத்தின் இபி காலனி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், நேதாஜி நகர், பெரியார் நகர் மற்றும் கிழக்கு தாம்பரத்தின் வேளச்சேரி மெயின் ரோடு, பழயத்தான் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படவுள்ளது.
குன்றத்தூர் பகுதியில் அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர் மற்றும் மூகாம்பிகை நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகளின்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. தொழில்நுட்ப காரணங்களால் மின் தடை ஏற்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.









