இயக்குனர் கிரிஷாந்தின் புதிய படம் மன்ஷியம்: மிரட்டும் டைட்டில் போஸ்டர் வெளியீடு

தேசிய விருது பெற்ற இயக்குனர் கிரிஷாந்தின் ஆறாவது படமாக 'மன்ஷியம் – தி பொட்டனி ஆஃப் எ கிரைம்' திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது மற்றும் இரண்டு மாநில திரைப்பட விருதுகளை வென்ற புகழ்பெற்ற இயக்குனர் கிரிஷாந்து தனது ஆறாவது திரைப்படமான மன்ஷியம் – தி பொட்டனி ஆஃப் எ கிரைம் (Manchiyam – The Botany of a Crime) திரைப்படத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த காடு மற்றும் மழை சூழலில், தொண்டிமடம் சிறைச்சாலையின் பழைய நுழைவாயிலுடன் காட்டப்படும் இந்த போஸ்டர், வேட்டையாடத் தயாராக இருக்கும் சிறுத்தையின் காட்சியுடன் மிகவும் மர்மமாகவும் திகிலூட்டும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் மையக்கருத்தை உணர்த்தும் வகையில், மரம் மறப்பதில்லை, கோடாரி மறக்கிறது (The Axe Forgets, But The Tree Remembers) என்ற வாசகம் படத்தின் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான குற்றப் பின்னணி கொண்ட திரில்லர் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முந்தைய படைப்புகளில் எப்போதும் புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு வரும் கிரிஷாந்தின் இந்த புதிய முயற்சி, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பிரம்மாண்டமான படைப்பில் சஞ்சு சிவராம், சுதி கோப்பா, வின்சி அலோசியஸ், மணியன்பிள்ளை ராஜு, நிரஞ்ச் மணியன்பிள்ளை ராஜு, ராகுல் ராஜீவ், நந்து, ராதா கோமதி, திவ்யா பிரபா, நிஷாந்த் சாகர், வினீத் தட்டில் டேவிட், ஜோஜி கே ஜான், பிரமோத் வலியநாடு மற்றும் ரூத் பி ஜான் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தனது ஸ்பையர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் கிரிஷாந்த் ஃபிலிம்ஸுடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் கிரிஷாந்தும், நடிகர் சஞ்சு சிவராமும் இணைந்து எழுதியுள்ளனர். கதையை உன்னி கார்த்திகேயன் எழுதியுள்ளார், கூடுதல் திரைக்கதை பணிகளை லிஜீஷ் குமார் மற்றும் ராகுல் ராஜீவ் கவனித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதமே தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக படத்தின் மற்ற முக்கிய அறிவிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









