dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுதிகளில் பாரபட்சம்: தனியார் கல்லூரிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள்

By Admin
30/08/2026
57 views
அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுதிகளில் பாரபட்சம்: தனியார் கல்லூரிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள்

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை விடுதிகளில் பாகுபாட்டுடன் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, அரசு தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழில்முறை கல்வி நிறுவனங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு விடுதிகளில் முறையான வசதிகள் மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களைத் தனியாகப் பிரித்து, நெரிசலான அறைகளில் தங்க வைக்கின்றனர். குறிப்பாக, ஒரு அறையில் பத்து மாணவர்களுக்கும் மேலாக தங்க வைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் பொதுப்பிரிவு மற்றும் வழக்கமான கட்டணம் செலுத்தி சேரும் மாணவர்களுக்கு நான்கு பேர் கொண்ட அறைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாகுபாடான அணுகுமுறை, அரசு பள்ளி மாணவர்களிடையே மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குவதாகச் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

விடுதி உணவகம் மற்றும் இதர அடிப்படை வசதிகளிலும் மாணவர்களிடையே வேறுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், தாங்கள் கடினமாக உழைத்து தகுதி அடிப்படையில் தொழில்முறை படிப்புகளில் இடம் பெற்றுள்ளதாகவும், சேர்க்கை முறையை வைத்து விடுதி வசதிகளைத் தீர்மானிப்பது சமூக நீதிக்கே எதிரானது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர். சேர்க்கை வகை எதுவாக இருந்தாலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது.

இதனைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. விடுதி அறைகளில் அதிகபட்சமாக நான்கு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இட ஒதுக்கீடு மாணவர்களைப் பொதுப்பிரிவு மாணவர்களுடன் இணைத்து தங்க வைக்க வேண்டும் என்பதையும் அந்த மனு வலியுறுத்துகிறது. மேலும், உயர் கல்வித்துறைச் செயலாளர் தலைமையிலான மாநில அளவிலான குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுக்கள் அமைத்து, தனியார் கல்லூரி விடுதிகளில் அடிக்கடி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார்களைப் பதிவு செய்ய ரகசிய உதவி எண் மற்றும் இணையதள வசதியை உருவாக்க வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#அரசுபள்ளிமாணவர்
#இடஒதுக்கீடு
#தமிழககல்வி
#சமூகநீதி
#விடுதிபாக்பாடு
#Reservation
#GovernmentSchool
#TamilNaduEducation
#StudentRights
#SocialJustice
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications