dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை: நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட மலைப்பாதை போக்குவரத்து

By Admin
27/10/2026
62 views
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை: நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட மலைப்பாதை போக்குவரத்து

கொடைக்கானலில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மலைப்பாதைகளில் பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் உள்ள உகராத்தே நகர், டம் டம் பாறை, நந்தங்கரை, வலைகிரி மற்றும் மச்சூர் போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் கொடைக்கானல்-பழனி சாலையில் உள்ள ஆனைக்கிரி சோலை, பி.எல். ஷெட் மற்றும் சவாரிக்காடு ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த மண்சரிவு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், மண்வெட்டிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு பாறைகளை அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர். மேலும், கொடைக்கானல் அப்சர்வேட்டரிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்த மரத்தை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கல், குண்டுபட்டி, பாலாம்புத்தூர் மற்றும் புதுப்புதூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மன்னவனூர்-பூண்டி சாலையில் விழுந்த மரத்தை வனத்துறையினர் அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர். பூம்பாறை கோவில் தெருவில் வசிக்கும் அழகுமலை மற்றும் சக்திவேல் ஆகியோரின் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் கனமழையினால் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பூம்பாறை-கிளாவரை சாலையில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு போக்குவரத்தை முழுமையாகத் தடுத்தது. மேலும், சின்னூர் கல்லாற்றுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஆற்றுப் பகுதிகளைக் கடக்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடைக்கானல் நகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஏரி சாலை முதல் வெள்ளிநீர் வீழ்ச்சி வரையிலான பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் கற்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கொடைக்கானல்
#கனமழை
#நிலச்சரிவு
#தமிழகவானிலை
#மலைப்பகுதி
#Kodaikanal
#HeavyRain
#Landslide
#TamilNaduWeather
#HillStations
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications