dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழக அரசு துறைகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

By Admin
29/10/2026
56 views
தமிழக அரசு துறைகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் விவரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்தபோது இந்த முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. திருநெல்வேலியில் உள்ள சந்தைக் குழுவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இ.தனுஷ்கோடி என்பவர், தனது பணியை நிரந்தரம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை அரசு நிராகரித்திருந்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், அவர் பணியில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டதாலும், மனு தாக்கல் செய்தபோது 10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்பதாலும் அவர் பணி நிரந்தரத்திற்கு தகுதியற்றவர் என அரசுத் தரப்பு வாதிட்டிருந்தது.

இருப்பினும், மனுதாரர் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதைக் கருத்தில் கொண்ட தனி நீதிபதி, நீண்ட காலமாக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை வாங்குவது முறையற்றது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதை மேற்கோள் காட்டி, அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், பல ஒப்பந்த ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பணிப் பாதுகாப்பும் இன்றி பணிபுரிந்து வருவதை கடுமையாக விமர்சித்தனர்.

நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால், தகுதியுள்ள பல ஊழியர்கள் நேரடியாக அரசுப் பணியில் சேரும் வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்த நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் பணி விவரங்களை விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னைஉயர்நீதிமன்றம்
#மதுரைக்கிளை
#ஒப்பந்தஊழியர்கள்
#தமிழகஅரசு
#பணிநிரந்தரம்
#MadrasHighCourt
#MaduraiBench
#ContractWorkers
#TamilNaduGovernment
#HighCourtOrder
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications