dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

By Admin
23/09/2026
60 views
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், அவர்களை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதவி வகித்தபோது, 3.01 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகச் சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி வி. லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, சட்டப்படி விசாரணையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு அளவு 6.4 சதவீதமாக மட்டுமே உள்ளதைக் காரணம் காட்டி, அவர்களை விடுவித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2025 ஆம் ஆண்டில் அந்த உத்தரவை ரத்து செய்தது. அதன் பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை, அந்த நீதிமன்றம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்ற வாதம், தற்போது விடுவிப்பு மனுவில் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்று தெளிவுபடுத்தினார். மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்த நீதிமன்றத்தால் தற்போது முடிவுக்கு வர முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னைஉயர்நீதிமன்றம்
#எம்ஆர்கேபன்னீர்செல்வம்
#திமுக
#சொத்துகுவிப்புவழக்கு
#தமிழகஅரசியல்
#MadrasHighCourt
#MRKPanneerselvam
#DMK
#AssetsCase
#TamilNaduPolitics
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications