dhina anjal logo
முகப்பு/சினிமா

நெட்பிளிக்ஸின் தி டேக்: டென்சல் வாஷிங்டன் - ராபர்ட் பேட்டின்சன் இணையும் அதிரடி கொள்ளை திரைப்படம்

By K. ராதாகிருஷ்ணன்
151 views
டென்சல் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி டேக்' திரைப்படம் ஜனவரி 15, 2027 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

டென்சல் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி டேக்' திரைப்படம் ஜனவரி 15, 2027 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான டென்சல் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்சன் இணைந்து நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான தி டேக் (The Take) படத்தின் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஜனவரி 15, 2027 அன்று திரையிடப்பட உள்ளது. முன்னதாக இப்படம் 'ஹியர் கம்ஸ் தி பிளட்' என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தை 'தி டூ போப்ஸ்' உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய பெர்னாண்டோ மெய்ரெல்ஸ் இயக்குகிறார். சைமன் கின்பெர்க் திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தில், ராபர்ட் பேட்டின்சன் முன்னாள் ராணுவ அதிகாரியாகவும், டென்சல் வாஷிங்டன் ஒரு புத்திசாலி திருடனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டேஸி எட்கர்-ஜோன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

படத்தின் கதைக்களம் மிகவும் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள மிகப்பொரிய வங்கியில் கொள்ளையடிக்க ஒரு மாஸ்டர் திருடன் (டென்சல் வாஷிங்டன்) முன்னாள் ராணுவ அதிகாரியான நோவாவிடம் (ராபர்ட் பேட்டின்சன்) உதவி கேட்கிறார். ஆனால், அந்த வங்கியில் நோவாவின் மனைவி ரோஸ் (டேஸி எட்கர்-ஜோன்ஸ்) பணிபுரிவது கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. தான் யாரை நம்புவது என்ற தர்மசங்கடமான சூழலில் நோவா சிக்கிக்கொள்ள, அந்தத் தப்பித்தல் பயணம் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மையக்கரு.

நடிகர் பட்டாளத்தில் டனாய் குருரா, சீன் ஹாரிஸ், மோசஸ் ஏரியாஸ் மற்றும் ஜஸ்டின் கிர்க் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இது குறித்து இயக்குனர் பெர்னாண்டோ மெய்ரெல்ஸ் கூறுகையில், இப்படம் ஒரு காதல் கதையில் நடக்கும் கொள்ளை சம்பவமா அல்லது ஒரு கொள்ளை திரைப்படத்தில் மையமாக இருக்கும் காதல் கதையா என்பது படத்தின் இறுதி வரை புரியாத புதிராக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். வெளியீட்டுத் தேதியுடன் சேர்த்து படத்தின் முதல் தோற்றப் புகைப்படங்களையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#திடேக்
#நெட்பிளிக்ஸ்
#டென்சல்வாஷிங்டன்
#ராபர்ட்பேட்டின்சன்
#ஹாலிவுட்சினிமா
#TheTake
#Netflix
#DenzelWashington
#RobertPattinson
#HollywoodMovie
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications