நெட்ஃப்ளிக்ஸின் புதிய கிறிஸ்துமஸ் படத்தில் இணையும் நிக் ஜோனாஸ் மற்றும் ஹன்னா டாட்

நெட்ஃப்ளிக்ஸின் புதிய கிறிஸ்துமஸ் காதல் திரைப்படமான 'தி மோர் தி மெரியர்' படத்தில் நிக் ஜோனாஸ் மற்றும் ஹன்னா டாட் இணைந்து நடிக்கின்றனர்.
பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸ் மற்றும் பிரிட்ஜர்டன் தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஹன்னா டாட் ஆகியோர் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் புதிய கிறிஸ்துமஸ் காதல் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தி மோர் தி மெரியர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை அரி சாண்டல் இயக்க உள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு சுவாரஸ்யமான கதையம்சத்தைக் கொண்டுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ கதையின்படி, சுதந்திரமாக வாழ்ந்து வரும் ஒரு இளைஞன், எதிர்பாராதவிதமாக தனது உறவினரின் குழந்தையை பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். அவனது கட்டுப்பாடற்ற வாழ்க்கை அந்தப் குழந்தையால் முற்றிலும் மாறுகிறது. மெதுவாக தந்தை என்ற பொறுப்பிற்கு அவன் பழகத் தொடங்கும் வேளையில், குழந்தையின் கடவுள் தாய் (Godmother) விடுமுறை காலத்தின்போது குழந்தையை அழைத்துச் செல்ல வருகிறாள். இதன்பிறகு அவர்களுக்கு இடையே உருவாகும் எதிர்பாராத காதல் கதையே படத்தின் மையப்பகுதியாகும்.
இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை தமாரா செஸ்ட்னா எழுதியுள்ளார். படத்தின் தயாரிப்பு பணிகளை மோனர்க் மீடியாவின் ஸ்டீவ் பார்னெட் மற்றும் லிங்கன் ரோட் ஃபிலிம்ஸின் மார்க் ரோஸ் ஆகியோர் இணைந்து கவனிக்கின்றனர். இவர்களுடன் நிக் ஜோனாஸ் மற்றும் ஸ்பென்சர் பெர்மன் ஆகியோரும் தயாரிப்பில் பங்கேற்கின்றனர். இருப்பினும், இந்தப் படம் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் இன்னும் வெளியிடவில்லை.
நிக் ஜோனாஸ் ஏற்கனவே பவர் பல்லாட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், ஜூமஞ்சி ஓபன் வேர்ல்ட் திரைப்படத்தில் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஹன்னா டாட், பிரிட்ஜர்டன் தொடரின் ஐந்தாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை ஈர்த்து வரும் இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் இந்த கிறிஸ்துமஸ் திரைப்படம் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.









