தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் மயானத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கரியணம்பட்டி பொது மயானத்தில் அடையாளம் தெரியாத நபரின் பாதி எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட கரியணம்பட்டி கிராம பொது மயானத்தில்,இன்று காலை பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
சடலம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத அளவிற்கு காணப்பட்டது.
உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்த போது,கடந்த சில நாட்களாக ஊரில் மரணங்கள் ஏதுமில்லை என்றும்,இது ஊர் பொதுமக்கள் எரியூட்டும் மயானம்,
இது யாருடைய சடலம் என்று அடையாளம் தெரியவில்லை,யாரோ வீசி சென்றுள்ளனர் என்று தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் அந்த சடலம் யாருடையது ?கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு வீசப்பட்டாரா?வீசிச் சென்றவர்கள் யார் ? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மயானத்தில் வீசி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









