dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

By Admin
03/11/2026
81 views
தமிழ்நாட்டில் மழைநீர் சேகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறைகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைநீரை வீணாக்காமல் சேமித்து நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி புதிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தாலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு கட்டிடத்தின் வகை, கூரை பரப்பு மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப விரிவான தொழில்நுட்ப முறைகளை விளக்குகின்றன. இதன்படி, கட்டிடங்களின் மேற்கூரை மூலம் சேகரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை தொட்டிகளில் சேமித்து வைப்பதற்கும், உபரியாக இருக்கும் நீரை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஊடுருவல் குழிகள் மற்றும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மூலம் பூமிக்குள் செலுத்துவதற்கும் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பொது இடங்களுக்கு என தனித்தனி சேகரிப்பு முறைகள் இந்த வழிகாட்டுதலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தொழிற்சாலைகள் மற்றும் பெரிய வளாகங்களில் அதிகப்படியான மழைநீரை சேகரிக்க அதன் எல்லைப் பகுதிகளில் உறிஞ்சுக் குழிகள் மற்றும் அகழிகளை அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான இடவசதி உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் தாழ்வான பகுதிகளில் கசிவுநீர் குளங்களை உருவாக்கவும் வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

சாலைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றும் நோக்கில் கசிவுநீர் கிணறுகள், வடிகட்டி கீற்றுகள், நீரை உறிஞ்சும் தரைக்கற்கள் மற்றும் பஞ்சுப் பூங்காக்கள் (sponge parks) போன்ற நவீன நுட்பங்களைப் பயன்படுத்த அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஏற்றுள்ளது. அரசு துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியாதாரங்கள் மற்றும் மாவட்ட அவசரக்காலத் திட்டங்களின் கீழ் இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#மழைநீர்சேகரிப்பு
#தமிழகஅரசு
#நிலத்தடிநீர்
#சுற்றுச்சூழல்பாதுகாப்பு
#தமிழகசெய்திகள்
#RainwaterHarvesting
#TamilNaduGovernment
#GroundwaterRecharge
#SaveWater
#WaterConservation
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications