நடிகர் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் இணைந்த சீமான்: அதிரடி தகவல் இதோ

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் 'சேயோன்' திரைப்படத்தில் நடிகர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
இயக்குநர் சிவகுமார் முருகுேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'சேயோன்'. புராண மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் மற்றும் நடிகர் சீமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை பாக்கியஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ராஜ்பி ஷெட்டி, அருள் தாஸ், பாலா சரவணன் மற்றும் சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது நடிகர் சீமான் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் சீமான் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் விது அய்யனா, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஆர்.கே. நாகு மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே 'அமரன்' திரைப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் படம் இதுவாகும்.
இயக்குநர் சிவகுமார் முருகுேசன் ஏற்கனவே ராதிகா சரத்குமார் நடிப்பில் 'தாய் கிழவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது உருவாகும் 'சேயோன்' திரைப்படம், இந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதைக்களம் மற்றும் இதர விவரங்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.









