dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கோவையில் தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு

By K. ராதாகிருஷ்ணன்
126 views
கோவை மாவட்டம் காரமடையில் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக ஒன்றிய செயலாளர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையில் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக ஒன்றிய செயலாளர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஒன்றியத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கிராம அளவிலான கிளைச் செயலாளராகப் பணியாற்றி வந்த 29 வயது பெண் ஒருவர், தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காரமடை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவெகவின் காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி மற்றும் அவருக்கு உதவியாகச் செயல்பட்ட சபிதா, பாண்டி ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கிளைச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தம்மிடம் அநாகரிகமாகவும், பாலியல் ரீதியாகவும் தவறாக நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது செயலுக்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, பழிவாங்கும் நோக்கில் அந்தப் பெண் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்தில் மற்றொரு பெண் நியமிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் மிரட்டப்பட்டு வந்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொகுதி எம்.எல்.ஏ-விடம் மூன்று முறை முறையிட்டும், உரிய ஆதாரங்களைக் கேட்கப்பட்டதே தவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருப்புசாமி, சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர் மீது இந்திய நீதிச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல், அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், சாதிய ரீதியாக அவமானப்படுத்தியதாகக் கூறி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் கடுமையான பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை விரட்டிச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததுடன், சாதிப் பெயரைக் கூறி இழிவுபடுத்தியதாகவும் புகாரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.பவன்குமார் ரெட்டி, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை தரப்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், இந்த விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#தமிழகவெற்றிக்கழகம்
#கோவைசெய்தி
#பாலியல்ஒடுக்குமுறை
#வன்கொடுமைதடுப்புச்சட்டம்
#காவல்துறைவிசாரணை
#TVK
#CoimbatoreNews
#SexualHarassmentCase
#SCSTAct
#CrimeReport
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications