dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கோவையில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்காநல்லூர் மேம்பாலப் பணிகள்: அடுத்த மாதம் தொடங்கத் திட்டம்

By Admin
13/10/2026
55 views
கோவையில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்காநல்லூர் மேம்பாலப் பணிகள்: அடுத்த மாதம் தொடங்கத் திட்டம்

கோவை சிங்காநல்லூர் மேம்பாலப் பணிகளை அடுத்த மாதம் தொடங்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகரின் முக்கியப் போக்குவரத்துப் பகுதியான சிங்காநல்லூரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளைத் தொடங்க நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட மண் பரிசோதனை மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 2.4 கிலோமீட்டர் நீளத்தில் அமையவிருக்கும் இந்த மேம்பாலத் திட்டத்திற்கு 170.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலமானது உழவர் சந்தையிலிருந்து ஜெய் சாந்தி தியேட்டர் சந்திப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. திருச்சி சாலை, காமராஜர் சாலை மற்றும் வெள்ளலூர் சாலைகள் சந்திக்கும் முக்கியமான புள்ளியாக சிங்காநல்லூர் இருப்பதால், இப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசுப் பேருந்து நிலையம் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை அருகாமையில் அமைந்துள்ளதால், தினசரி பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனைத் தீர்க்கும் வகையில், இந்த மேம்பாலத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

திட்டத்தின் அடுத்தகட்டமாக, மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழுவிடம் போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் முறையான அனுமதி பெற்ற பிறகு கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து மாற்றுப் பாதைகள் மற்றும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளை ஏழு மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தவும், மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக சுமார் 1,475.6 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான வருவாய்த் துறை சார்ந்த பணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் சட்டத்தின் கீழ் நில மதிப்பு நிர்ணயம் செய்யும் பணிகள் தற்பொழுது துரிதமாக நடைபெற்று வருகின்றன. மொத்த திட்ட மதிப்பீட்டில் 116.77 கோடி ரூபாய் கட்டுமானப் பணிகளுக்கும், 15.4 கோடி ரூபாய் நிலம் கையகப்படுத்துவதற்கும், 44.7 லட்சம் ரூபாய் மின்சாரக் கம்பிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் போன்ற பொதுப்பணி மாற்றங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கோவை
#மேம்பாலம்
#சிங்காநல்லூர்
#தமிழக செய்திகள்
#நெடுஞ்சாலைதுறை
#Coimbatore
#SinganallurFlyover
#Infrastructure
#TamilNaduNews
#RoadDevelopment
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications