dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் கேக்: ரூ. 9.27 கோடிக்கு டெண்டர் அறிவிப்பு

By Admin
12/10/2026
59 views
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் கேக்: ரூ. 9.27 கோடிக்கு டெண்டர் அறிவிப்பு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க 9.27 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 9.27 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 61.84 லட்சம் மாணவர்களுக்கு இந்த கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன.

பொதுவாக சுதந்திர தினம், குடியரசு தினம் அல்லது முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் சர்க்கரை பொங்கல் வழங்கப்படுவது வழக்கம். இந்த சூழலில், முதல்முறையாக மாணவர்களுக்கு பெரிய அளவில் கேக் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த கேக்குகள் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட இந்த கேக் விநியோகம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காகக் கோரப்பட்டுள்ள டெண்டரின்படி, கேக்குகள் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு வந்து சேர வேண்டும். கேக்குகள் குறைந்தபட்சம் 30 நாட்கள் கெட்டுப் போகாதவாறு இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாகும். குறிப்பாக, கலப்பு பழம் (Mixed Fruit) அல்லது டூட்டி-ப்ரூட்டி, கிளாசிக் வெண்ணிலா, ரிச் சாக்லேட் மற்றும் வெண்ணெய் அல்லது பால் ஸ்பாஞ்ச் ஆகிய நான்கு வகை சுவைகளில் கேக்குகள் இருக்க வேண்டும் என்று டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) செல்லுபடியாகும் உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் விநியோக வலைப்பின்னல் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தொழில்நுட்பத் தகுதி மற்றும் நிதித் தகுதி ஆகிய இரண்டு கட்டங்களாக ஏல செயல்முறை நடைபெறும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 17-ஆம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் தாங்கள் வழங்கும் கேக்குகளின் ஆயுட்காலத்தை உறுதிப்படுத்தும் ஆய்வக அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#குழந்தைகள் தினம்
#தமிழ்நாடு அரசு
#அரசுப் பள்ளிகள்
#தமிழக செய்தி
#கேக் விநியோகம்
#Childrens Day
#Tamil Nadu Government
#School Students
#TNCSC
#Government Tender
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications