dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

திருப்பூர் சமூக ஆர்வலர் கொலை வழக்கு: பேரூராட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Admin
12/09/2026
58 views
திருப்பூர் சமூக ஆர்வலர் கொலை வழக்கு: பேரூராட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பூர் மாவட்டம் சமலாபுரம் பேரூராட்சித் தலைவர் மீதான கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் சமலாபுரம் பேரூராட்சித் தலைவராக இருந்த விநாயகா பழனிசாமி என்பவருக்கு, சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஜூலை 4, 2025 அன்று, சமலாபுரம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை விநாயகா பழனிசாமி முன்னெடுத்தார். ஆனால், சாலை அமைக்கத் திட்டமிடப்பட்ட இடம் தனியார் நான்கு பேருக்குச் சொந்தமானது என்பதால், அவர்கள் அந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சாலைப் பணி தொடர்பான புகாரை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே. பழனிசாமி (57) என்பவர், பேரூராட்சி நிர்வாக பொறியாளரிடம் அளித்தார். இந்தப் புகாரின் காரணமாக விநாயகா பழனிசாமிக்கும், சமூக ஆர்வலர் பழனிசாமிக்கும் இடையே கடுமையான முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறு தொடர்ந்த நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி கோரமடை - சோமனூர் சாலையில் பழனிசாமி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று, பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சமலாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சூலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பழனிசாமியின் மகன் சுகுமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விரிவான விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமி (62) தான் ஓட்டினார் என்பது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#திருப்பூர்
#கொலைவழக்கு
#ஆயுள்தண்டனை
#சமூகஆர்வலர்
#சமலாபுரம்
#Tiruppur
#LifeImprisonment
#Justice
#TamilNaduNews
#CourtVerdict
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications