dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே சோகம்: லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

By K. ராதாகிருஷ்ணன்
93 views
தஞ்சாவூர் அருகே லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் அருகே லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான எம். பெனசீர் பேகம். இவர் தனது மூன்று குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக வண்ணாரப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அம்மன்பேட்டை கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெனசீர் பேகம் மற்றும் அவரது மகன்கள் முகமது ஜசித் (10), முகமது ஹலீத் (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு சிறுவன் முகமது ஜாவித் (12) உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெடுங்காவேரி காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல்துறை, பிரேதப் பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு குழந்தைகளும் சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#தஞ்சாவூர்
#சாலைவிபத்து
#உயிரிழப்பு
#செய்திகள்
#தமிழ்நாடுசெய்திகள்
#Thanjavur
#RoadAccident
#TamilNaduNews
#AccidentAlert
#LocalNews
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications