dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் வெற்றி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சி.ஜோசப் விஜய் பதில்

By Admin
28/08/2026
78 views
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் வெற்றி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சி.ஜோசப் விஜய் பதில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தனது தேர்தல் வெற்றி செல்லாது என்ற மனுவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி.ஜோசப் விஜய், தனது தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த இனிகோ இருதயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளைப் பயன்படுத்தியதாகவும், இது இந்திய தேர்தல் ஆணையத்தின் பிப்ரவரி 5, 2024 தேதியிட்ட வழிகாட்டுதல்களை மீறிய செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில், முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 'பிளான்ட்' (Plaint) நிராகரிப்பு விண்ணப்பத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொகுதியின் தேர்தல் முடிவை செல்லாது என அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறப்படுவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 100 (1) (d) (iv)-ன் கீழ் தேர்தல் முடிவை செல்லாது என அறிவிக்க போதுமான சட்டப்பூர்வ அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என்று முதல்வர் வாதிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் புகார்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலை ரத்து செய்வதற்கான தனிப்பட்ட சட்டப்பூர்வமான காரணங்களாக அமையாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம், எந்த வகையில் வாக்குகளைப் பாதித்தது அல்லது தேர்தல் முடிவை மாற்றியமைத்தது என்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் மனுதாரரால் வழங்கப்படவில்லை என்றும், இது வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்த குற்றச்சாட்டு என்றும் முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்தல் செலவினம் குறித்த புகாரைப் பொறுத்தவரையில், சட்டத்திற்கு உட்பட்ட செலவு வரம்புகளைத் தாண்டவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள முதல்வர், மனுதாரர் தரப்பில் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தத் தேவையான முறையான ஆவணங்களோ அல்லது விரிவான தகவல்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தி வாக்குச் சேகரித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் சட்டப்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமின்றி வெறும் கற்பனையாக உள்ளது என்று தனது மனுவில் சி.ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகஅரசு
#சென்னைஉயர்நீதிமன்றம்
#சிஜோசப்விஜய்
#தேர்தல்வழக்கு
#தமிழகவெற்றிக்கழகம்
#TamilNaduPolitics
#MadrasHighCourt
#JosephVijay
#ElectionPetition
#TVK
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications