dhina anjal logo
முகப்பு/சினிமா

ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையும் வித்யா பாலன்: புதிய கதாபாத்திரத்தின் விவரம் இதோ!

By Admin
21/09/2026
36 views
ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையும் வித்யா பாலன்: புதிய கதாபாத்திரத்தின் விவரம் இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் காந்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்களின் அறிமுகம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான வித்யா பாலன், இந்தத் திரைப்படத்தில் காந்தா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வித்யா பாலன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார். இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படத்தின் மூலம் முழுமையான கதாபாத்திரத்தில் அவர் தமிழ் ரசிகர்களை சந்திக்க உள்ளார். இறுதியாக இவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கி நடித்த ராஜா சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் நட்சத்திரப் பட்டாளம் தற்போது மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. வித்யா பாலனுடன் எஸ்.ஜே. சூர்யா போதி என்ற கதாபாத்திரத்திலும், இவர்களுடன் விஜய் சேதுபதி, அன்னா ராஜன், ஹக்கீம் ஷா, பகவதி பெருமாள், மேக்னா ராஜ் மற்றும் ஜதின் சர்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா, சிவராஜ்குமார், யோகி பாபு, ஜாஃபர் சாதிக் மற்றும் விநாயகம் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களைத் தொடர உள்ளனர்.

டைగர் முத்துவேல் பாண்டியனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் மிரட்ட வரும் இந்த திரைப்படம், அக்டோபர் 15 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிலை கடத்தல் கும்பலை ஒழிக்கும் பணியின் போது காணாமல் போன தனது மகன் தொடர்பான கதைக் களத்தைக் கொண்டு முதல் பாகம் அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், முந்தைய பாகத்தை விட அதிக விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஜெயிலர்2
#வித்யாபாலன்
#ரஜினிகாந்த்
#தமிழ் சினிமா
#திரைச்செய்தி
#Jailer2
#VidyaBalan
#Rajinikanth
#TamilCinema
#KollywoodUpdates
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications