dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

விழுப்புரத்தில் பரபரப்பு: பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவர் கைது

By Admin
11/08/2026
112 views
விழுப்புரத்தில் பரபரப்பு: பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவர் கைது

விழுப்புரத்தில் மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள முத்தூப்பு பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான நபர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நபர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். முறையாக வேலைக்குச் செல்லாததால், குடும்பத்தை வழிநடத்த அந்தப் பெண் வீட்டு வேலைகளுக்குச் சென்று வருமானம் ஈட்டி வந்துள்ளார். கணவனின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அந்தப் பெண் பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, டி.வி.கே சாலையில் பின்தொடர்ந்து வந்த அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கழிவறை சுத்தம் செய்யும் அமிலத்தை (ஆசிட்) அவர் மீது வீசியுள்ளார். இதில் முகம் மற்றும் கண்ணில் பலத்த காயம் அடைந்த அப்பெண் வலியால் அலறியதைக்கண்டு அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், அந்தப் பெண்ணின் இடது கண்ணில் ஆசிட் பட்டதால் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன்காரணமாக, அவர் சென்னை அரசு கண் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய கணவரை காவல்துறையினர் விரைந்து சென்று பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணையில், கைது செய்யப்பட்டவருக்கு இது இரண்டாவது திருமணம் என்பதும், மது பழக்கம் மற்றும் சந்தேக குணம் காரணமாகவே முதல் மனைவி அவரைப் பிரிந்து சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மீது ஏற்கனவே பலமுறை காவல்துறை புகார் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு தாக்கியதாகவும், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவர் மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#விழுப்புரம்
#குற்றம்
#ஆசிட்வீச்சு
#தமிழகசெய்தி
#காவல்துறை
#Villupuram
#CrimeNews
#AcidAttack
#TamilNadu
#Justice
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications